தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம்

ஜெயங்கொண்டம், அக்.23: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் வளரிளம் பருவத்திற்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை மஞ்சுளா தலைமை வகித்தார். ஆசிரியை ஷீலா ராணி வரவேற்று பேசினார்.

அரசு மருத்துவர் சந்தியா ராஜலட்சுமி பேசும்போது மலேரியா டெங்கு நோய்கள் வராமல் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்,இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், துரித உணவுகளை தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம், மழைக்காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம் , வளர் இளம் பருவத்தினர் இடையே வரும் பருவ மாற்றங்கள் அதனால் வரும் சந்தேகங்களும் விளக்கங்களும் போதை வஸ்துகளை தவிர்க்க வேண்டியதன் அவசியம் ,போதை பொருட்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினார். ஆசிரியர்கள் செல்வம், நித்யா, பிரபாகரன், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

The post தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: