அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

 

பெரம்பலூர், அக்.19: அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பாக அதன் மாநில துணைத்தலைவர் செல்வி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

திறன் வளர்ப்புப் பயிற்சி கொடுத்து, சான்றிதழ் வழங்கிட வேண்டும். தீபாவளி பண்டிகை சிறப்பு தொகைக்கு ஒரு மாத ஊக்கத் தொகையை தீபாவளி போனசாக வழங்கிட வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தை மகளிர் திட்டத்துடன் வழங்குவதை கைவிட்டு விட்டு, ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம்செய்யவேண்டும். காலமுறை வரை ஊதியம் வழங்கவேண்டும். இஎஸ்ஐ, இபிஎஃப் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஊழியர்களுக்கு பேறுகால ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18-அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: