வடகிழக்கு பருவமழை சமாளிக்க தேவையான தளவாட பொருட்கள்

 

ஜெயங்கொண்டம், அக். 17: தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அந்தந்த பகுதியில் ஆறு குளங்கள் பெரிய ஏரிகள் போன்றவற்றில் நீர் நிரம்பி வெளியேறாத வண்ணம் குளங்கள் ஆழப்படுத்த பட்டும் குளங்களில் இருந்து நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளை சேதப் படுத்தாமல் இருக்க மணல் மூட்டைகள் பொதுமக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் நீர் பிடிப்பு பகுதியாக இருந்தால் அப்பகுதியில் கடந்து செல்ல போட்படகு ரப்பர் படகு உள்ளிட்டவற்றை அந்தந்த துறையினர் பாதுகாப்பாக இருப்பில் வைத்துள்ளனர் இவற்றை அந்தந்த துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அறிவுரை அடிப்படையில், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் தேவையான தளவாடப் பொருட்களான மண்வெட்டி கடப்பாரை மரம் அறுக்கும் இயந்திரம் மருந்து தெளிப்பான் பணியாளர்களுக்கு உடைய பாதுகாப்பு கவசங்கள் புகைத்தெளிப்பான் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக் குமார் ஆய்வு செய்தார்

The post வடகிழக்கு பருவமழை சமாளிக்க தேவையான தளவாட பொருட்கள் appeared first on Dinakaran.

Related Stories: