வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

 

தா.பழூர், அக்.19: சித்தமல்லி நீர்தேக்கத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நீர் பிடிப்பு பகுதியின் முக்கிய ஆதாரங்களாக விளங்கும் ஏரி, குளம், நீர்த்தேக்கம் அணைகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்னேரி, மற்றும் தா.பழூர் அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வளத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சித்தமல்லி நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த ஏரியில் உள்ள நீரை வைத்து விவசாயிகள் ஒருபோதும் சாகுபடி செய்து வருகின்றனர் இதன் மூலம் கரும்பு நெல் பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்பொழுது வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளக்குமார் தலைமையில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், அரியலூர் மருதையாறு வடிநிலக் கோட்டப் பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சித்தமல்லி நீர்த்தேக்க அணை மற்றும் பொன்னேரி ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு, மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது ஜெயங்கொண்டம் மருதையாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் தமிழரசன், உதவி பொறியாளர்கள் ஆகாஷ், அபிராமி ஆகியோர் உடனிருந்தனர்.

The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: