பெரம்பலூரில் பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

 

பெரம்பலூர், அக்.22: பெரம்பலூரில் மாவட்ட அளவிலான 17, 19 வயதுக் குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட அளவிலான 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 3000மீட்டர் ஓட்டம், கோல் ஊன்றி தாண்டுதல், 400 மீட்டர் தடைதாண்டி ஒட்டம், ஈட்டி எறிதல் போட்டி ஆகியவிளையாட்டுப் போட்டிகள் பெரம்பலூர் பாரத ரத்னா புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநிலஅளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர். இந்த, விளையாட்டுப் போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து நடத்தியிருந்தனர்.

The post பெரம்பலூரில் பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: