சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

சிவகாசி, அக்.22: சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். தமிழ்நாடு புடோகான் கராத்தே சங்கம் சார்பாக சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. போட்டியை சிவகாசி யூனியன் துணைத்தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சித்ரா ஜெயந்தி முன்னிலை வகித்தார். போட்டியில் மதுரை, கோவை, திருச்சி, கரூர், நாகர்கோவில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்தப்போட்டியில் 5 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தனிநபர் கட்டா, குழு கட்டா, தனி நபர் பைட், குழு பைட், வெப்பன்ஸ் கட்டா என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் சான்றுகளும் பரிசு கேடயமும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை சவுத் கோஸ்ட் புடோகான் கராத்தே அசோசியேஷன் தலைவர் பாஸ்கர், செயலாளர் கராத்தே மாஸ்டர் முருகன் செய்திருந்தனர்.

The post சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி appeared first on Dinakaran.

Related Stories: