அரியலூர் வி.சி.க. சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு

 

அரியலூர், அக். 22: அரியலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விசிக மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா தலைமையில் விசிகவினர் மனு அளித்தனர். அந்த மனுவில், மணப்பத்தூர் கிராம ஆதிதிராவிட மக்களுக்கான மயான பாதை அமைத்து தர வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும் ஆதிகுடிக்காடு, ஆனந்தவாடி மற்றும் கருப்பிலாகட்டளை கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் எனவும், அங்கனூர் கிராம 7 வது வார்டில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வழங்க வேண்டுமென மனு அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மருதவாணன், அரியலூர் ஒன்றிய பொருளாளர் மணக்கால் பூமிநாதன், ஒன்றிய அமைப்பாளர் மணப்பத்தூர் முருகேசன், அரியலூர் சட்டமன்ற தொகுதி ஊடக அமைப்பாளர் ஆதிகுடிகாடு சதிஷ் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் வி.சி.க. சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: