கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், அக்.22: பள்ளி, கல்லூரிகளில் ஆங்கில மருந்து மாத்திரைகளை வழங்க கூடாது என வலியுறுத்தி இயற்கை வழி வாழ்வியாளர்கள் கூட்டமைப்பினர் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் இயற்கை வழி வாழ்வியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு தலைமையில் 10க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒற்றை மருத்துவம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி, அக்குபஞ்சர் மற்றும் மரபு வாழ்வியல் என்று பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகிறது. ஆகையால் பள்ளி கல்லூரிகளில் ஒற்றை மருத்துவ முறையை அரசு கைவிட வேண்டும். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளுடன் கூடிய ஆங்கில மருந்தை கொடுக்கக் கூடாது. என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

The post கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: