வேலம்மாள் மருத்துவமனை சார்பில் பக்கவாதம், நரம்பியல் பாதிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

மதுரை, அக். 21: மதுரை, தெப்பக்குளம் பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பில் மருத்துவக் கல்லூரி மற்றும் இணை சுகாதார அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பக்கவாதம் மற்றும் மூளை நரம்பியல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் 3 கி.மீட்டர் தூரம் வாக்கத்தான் சென்று,

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக பக்கவாதம் ஏற்பட்டால் கோல்டன் அவர்ஸ் எனப்படும் முதற்கட்ட நேரங்களில் எந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் நடனம், நாடகம் போன்றவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, முதன்மை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் மற்றும் பக்கவாதம், மூளை நரம்பியல் துறை  மருத்துவர்கள் கவிதா, கணேஷ்குமார், அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வேலம்மாள் மருத்துவமனை சார்பில் பக்கவாதம், நரம்பியல் பாதிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: