நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு

 

நீடாமங்கலம், அக். 19: நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், வலங்கைமான், கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி தாலுகாவில் விவசாயிகள் குறுவை, தாளடி, சம்பா சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர். சாகுபடி செய்த நெல் மணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

விற்பனை செய்த நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து அருகில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், நவீன அரிசி ஆலை சுந்தரக்கோட்டை மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி ஆகிய இடங்களில் நெல் மூட்டைகளை சேமித்து வைத்து பிறகு அங்கிருந்து லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து ரயில் வேகன்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சன்ன ரகம் மற்றும் பொது ரக நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பப்படுகிறது.

அதேபோன்று தனியார் முகவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரசு நவீன அரிசி ஆலை சுந்தரக் நோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனியில்ருந்து அரவை செய்த அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொது வினியாக திட்டத்திற்கு அனுப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி தாலுகா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்த சன்ன ரக நெல் 1000 டன் நெல் மூட்டைகள் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்களில் ஏற்றி அரவைக்கு தர்மபுரி அனுப்பிவைத்தனர்.

The post நீடாமங்கலத்திலிருந்து தர்மபுரிக்கு 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: