கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் வித்யா பாலன்

சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் மணிரத்னம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றும் முதல் முறையாக அவர் கமலஹாசனுடன் ஜோடி சேர உள்ளதாகவும் கூறப்பட்டது. அதேபோல் கமல்ஹாசனுடன் ஏற்கனவே ‘மன்மதன் அன்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்த திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பாலிவுட் நடிகை வித்யா பாலன் இதில் கமலுக்கு ஜோடியாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

The post கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் வித்யா பாலன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: