அப்துல் காலம் பிறந்தநாள் விழா

திருப்புத்தூர், அக். 17: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். அப்துல் கலாம் உருவ படத்திற்கு பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆசிரியை கலைவாணி அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எழுதிய நூல்கள் குறித்து பேசினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கபட்டது.

The post அப்துல் காலம் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: