மேகக் கூட்டங்கள் ஆந்திரா சென்றதால் தப்பியது சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை: மேகக் கூட்டங்கள் தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டதால் ‘தப்பியது சென்னை’ என்றும், சென்னையில் சில இடங்களில் 300 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களுக்கு நல்லதொரு செய்தி காத்திருக்கிறது. இனி மிதமான மழைதான் பெய்யும். அதிக மழைக்கு வாய்ப்பில்லை. சென்னைக்கு அருகே காற்றழுத்தம் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையிலும் அது கரையை கடக்கும் பகுதிக்கு வடக்கு பக்கத்தில்தான் காற்று குவிந்திருக்கிறது.

எனவே சென்னை மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து பெய்யும் அதீத கனமழை இனி நமக்கு கிடைக்கப் போவதில்லை. இயல்பான மழையே கிடைக்கும். தற்போது காற்று குவிதல் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்கிறது. காற்றழுத்தம் கரையை கடந்ததும் அதன் தாக்கத்தால் பெய்யும் மழையானது வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை இருக்கும். அதுவும் நமக்கு மேனேஜ் செய்யும் அளவுக்குத்தான் இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தி வைத்துள்ள கார்களை உரிமையாளர்கள் வீட்டுக்கு கொண்டு செல்லலாம். கடந்த இரு நாட்களில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதேபோன்று சென்னையில் சில இடங்களில் 300 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மேகக் கூட்டங்கள் ஆந்திரா சென்றதால் தப்பியது சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: