மன்னார்குடி அருகே சாலை சென்டர் மீடியனில் லாரி மோதிய விபத்து

*சோலார் சிக்னல் லைட் சேதம்

மன்னார்குடி : திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து பல சரக்கு ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து மன்னார்குடியில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து பல சரக்கு ஏற்றிச் சென்ற லாரி, மன்னார்குடியை அடுத்தகோட்டூர் கார் ஸ்டாண்ட் அருகே நேற்று அதிகாலை திருத்துறைப்பூண்டிக்கு சென்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் உள்ள சென்டர் மீடியம் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், காயமடைந்த லாரி டிரைவர் விளக்குடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவரை,அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த கோட்டூர் இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்ஐ நிதி, நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தில் நெடுஞ்சாலைத் துறையினரால் வைக்கப்பட்டிருந்த சோலார் சிக்னல் லைட் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும்.

The post மன்னார்குடி அருகே சாலை சென்டர் மீடியனில் லாரி மோதிய விபத்து appeared first on Dinakaran.

Related Stories: