தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம்

இந்திய நடிகர்களின் ‘தி கிரேட் எஸ்கேப்’ என்ற ஹாலிவுட் படம், வரும் மே 12ம் தேதி ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சந்தீப் ஜே.எல் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் சம்பத் ராம், பாபு ஆண்டனி நடித்துள்ளனர். சவுத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. கைசாட் பட்டேல், பிரோஸ் பட்டேல் இணைந்து இசை அமைத்துள்ளனர். கென்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றிய சந்தீப் ஜே.எல், ‘அவுட்ரேஜ்’ படத்தில் ஹாலிவுட்டில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். இப்படம் கடந்த 2020ல் வெளியானது.

அவர் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள 2வது ஹாலிவுட் படம், ‘தி கிரேட் எஸ்கேப்’. அவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உணவகத்தில் பணியாற்றும் ஹீரோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் மாஃபியா கும்பலிடம் சிக்குகிறார். அந்த கும்பல் அவரை விடாமல் துரத்துகிறது. ஹீரோவை மற்றொரு மாஃபியா கும்பல் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்றுகிறார். இதனால், மாஃபியா குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. ஹீரோவை பாபு ஆண்டனி என்ன காரணத்துக்காக, எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை’ என்றார்.

The post தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: