12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று 86,900 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,739 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.56 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள் 20 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 12 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: