இந்தநிலையில் கடந்த 8ம் தேதி ஸ்ரீ நாத் பாசி கொச்சியில் பைக்கில் சென்ற ஒரு வாலிபர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டியது ஸ்ரீ நாத் பாசி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது கொச்சி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் நடிகர் ஸ்ரீ நாத் பாசியின் லைசென்சை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் ஆர்டிஓ உத்தரவிட்டு உள்ளார்.
The post பைக் மீது மோதி விட்டு காரை நிறுத்தாமல் சென்ற பிரபல நடிகரின் லைசென்ஸ் ஒரு மாதத்துக்கு ரத்து appeared first on Dinakaran.