மோசமான வானிலை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

பித்ரோகர்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக உத்தரகாண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் காலியாக உள்ள 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து பித்ரோகர் மாவட்ட மாஜிஸ்திரேட் விநோத் கிரிஷ் கோஸ்வாமி கூறியதாவது, “தலைமை தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் மிலாம் பனிப்பாறைக்கு இன்று(நேற்று) மதியம் 1 மணியளவில் புறப்பட்டு சென்றது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் ரலாம் கிராமத்தில் உள்ள ஹெலிபேடில் மதியம் 1.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது. அதில் விமானியுடன் சேர்த்து 4 பேர் இருந்தனர். அனைவரும் பத்திரமாக உள்ளனர்” என்றார்.

The post மோசமான வானிலை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: