வாலிபரின் மண்டையை உடைத்து பணம் பறிப்பு

 

சிவகாசி, அக்.11: சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் காளிராஜ். இவர் எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பார் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் மாரியப்பன்(37), அழகர்ஆனந்த்(34), தர்மலிங்கம்(40) மற்றும் பாண்டிசெல்வம் ஆகியோர் காளிராஜியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை அவரது தம்பி வெங்கடேஷ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் உள்ளிட்ட 4 பேரும் வெங்கடேசை தாக்கி உள்ளனர். மாரியப்பன் பீர் பாட்டிலால் வெங்கடேஷ் மண்டையில் அடித்துள்ளார். இதில் வெங்கடேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் மாரியப்பன், அழகர் ஆனந்த், தர்மலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பாண்டி செல்வம் என்பவரை தேடி வருகிறார்கள்.

The post வாலிபரின் மண்டையை உடைத்து பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: