மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

 

திண்டுக்கல், அக். 11: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். செயலர் வீரராகவன் வரவேற்றார். கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினினை துணை முதல்வராக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றியக குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான அமர்வு படி, தினப்படி, நிலையான பயணப்படி வழங்குவதற்கான ஒப்புதல் அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

The post மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: