மதுரை போலீசார் அதிரடி 50 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட மூவர் கைது கார், 6 செல்போன்கள் பறிமுதல்

 

மதுரை, அக். 11: மதுரையை அடுத்த ஒத்தக்கடை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விவசாய கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் மைதானம் அருகே ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சிவபாலன், எஸ்ஐ அருண் தலைமையிலாய தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போத ஒரு காரில் 50 கிலோ கஞ்ா இருப்பது தெரியவந்தது.
அந்த காரில் இருந்த விழுப்புரம் மாவட்டம் அடையாளம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மனைவி தனலெட்சுமி(56), அதே மாவட்டம் பரக்காணம் கண்ணன்(34), சென்னை மணலி பகுதியை சேர்ந்த கேசவகிருஷ்ணன்(22) ஆகியோரை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடமிருந்து கார் மற்றும் 6 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post மதுரை போலீசார் அதிரடி 50 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட மூவர் கைது கார், 6 செல்போன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: