நான் எம்பி ஆவதற்கு பக்கபலமாக இருந்தவர் முரசொலி செல்வம்: – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இரங்கல்

விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: என்னுடைய அருமை நண்பர் முரசொலி செல்வம் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியாகி விட்டேன். 66 ஆண்டுகளாக எனக்கும் முரசொலி செல்வத்துக்கும் பழக்கம் உண்டு. முரசொலி செல்வம் கட்சிப்பணியில் மிகத்தீவிரமாக இருந்தவர். குறிப்பாக திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் நானும் முரசொலி செல்வமும் மிகவும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருந்தோம். கட்சிக்காக கடுமையாக உழைத்தோம். கட்சிக்காக மாணவர்களாகிய நாங்கள் பணம் திரட்டி முரசொலி செல்வம் வழியாக அண்ணாவிடம் கொடுப்போம்.

1967 தேர்தலில் வந்தவாசி தொகுதிக்கு போட்டியிட கட்சியிடம் விருப்பம் தெரிவித்தேன். அதேபோல் அன்றைய எம்.பி ஒருவரும் விருப்பம் தெரிவித்தார். ஆனால், எனக்காக முரசொலி செல்வமும், முரசொலி மாறனும் கலைஞரிடத்தில் முறையிட்டதை கலைஞர் என்னிடம் கூறியதை இன்றளவும் என்னால் மறக்க முடியாது. நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு எனக்கு பக்க பலமாக இருந்தவரும் முரசொலி செல்வம் தான். செல்விக்கும், முரசொலி குடும்பத்திற்கும் மற்றும் முரசொலி செல்வம் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய ஒரு மனிதரை நம் தமிழ் சமூகம் இழந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நான் எம்பி ஆவதற்கு பக்கபலமாக இருந்தவர் முரசொலி செல்வம்: – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: