ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல?: ஐ.ஐ.டி. காலண்டரின் புதிய சர்ச்சை

மேற்கு வங்கம்: இந்தியாவிற்கு ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல என படங்களுடன் காரக்பூர் ஐ.ஐ.டி.வெளியிட்டுள்ள காலண்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொகஞ்சதாரோ, ஹராப்பாவில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இந்தியாவின் பண்டைய நாகரீகம் வெளிவந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் திராவிடர்கள் மற்றும் ஆரியர்கள் ஆகிய இரு இனங்கள் வாழ்ந்தது தெரியவந்தது. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களே என்பதும், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டு அதுவே வரலாற்று நூல்களில் படங்களாகவும் இடம்பெற்றது.இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் காரக்பூர் ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான காலண்டர் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 12 மாதங்களுக்கான 12 பக்கங்களிலும் ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல என்ற கருத்து, படங்களுடன் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவு முறையின் அடிப்படைகள் மீட்டெடுப்பு என்று அதற்கு தலைப்பிட்டுள்ளது. ஹராப்பா நாகரீகம் வேதங்களின் ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காலண்டர் வெளியானதை அடுத்து காரக்பூர் ஐ.ஐ.டி.யின் இந்த செயலுக்கு ஆய்வாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.            …

The post ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல?: ஐ.ஐ.டி. காலண்டரின் புதிய சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: