செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட் திருட்டு: 9 பேர் கைது

 

வலங்கைமான், அக். 10: வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் டவர்களில் உள்ள விலை உயர்ந்த ரேடியோ ரிமோட்டு யூனிட்டை திருடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக செல்போன் டவர்களில் விலை உயர்ந்த பொருளான ரேடியோ ரிமோட்டு யூனிட் திருடப்படுவதாக வடபாதிமங்கலம், திருவாரூர் தாலுகா, நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், ஆலிவலம் மற்றும் கோட்டூர் காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைப்படி திருவாரூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழ்மாறன் வலங்கைமான், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.இந்நிலையில், குடவாசல் தாலுகா, வேடம்பூரை சேர்ந்த சாமிநாதன் மகன் கணேஷ் மற்றும் அவரது சகோதரர் யோகேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கணேஷ், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனத்தில் தினேஷ் என்பவருடன் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர். தற்போது கோயமுத்துார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் மேலும் பணம் தேவைப்படும்போது தினேஷ் உதவியுடன் திருவாருரை சுற்றியுள்ள செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட்டை திருடிவிற்பனை செய்துள்ளதாக அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

The post செல்போன் டவர்களில் ரேடியோ ரிமோட்டு யூனிட் திருட்டு: 9 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: