தாமரை குளத்திற்கு படித்துறை கட்டி தரவேண்டும்

 

முத்துப்பேட்டை, அக். 10: தாமரை குளத்தித்திற்கு பயன்பாட்டிற்கு படித்துறை கட்டி தரவேண்டுமென கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் நிறைவெற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி துரைத்தோப்பு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது கிளை மாநாடு நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியகுழு உறுப்பினர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னதாக கட்சி கொடியை மூத்த உறுப்பினர் கோவிந்தராஜ் ஏற்றினார். கூட்டத்தில் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் உப்பூர் ராஜேந்திரன் பேசினார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது புதிய கிளை செயலாளராக ஆத்மநாதன் தேர்வு செய்யப்பட்டார். தொடர;ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துரைத்தோப்பு மயானத்திற்கு செல்லும் மண்சாலையை செம்மண் சாலையாக செப்பனிட வேண்டும், சேதமடைந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மயான கட்டிடத்தை புதிதாக கட்டிதர வேண்டும், தாமரை குளத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை கட்டித்தரவேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிஐடியூ நிர்வாகிகள் பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தாமரை குளத்திற்கு படித்துறை கட்டி தரவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: