தஞ்சாவூர் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு 2 பேர் கைது ஒரத்தநாடு அருகே விவசாயிகளுக்கு வயல் தின விழா

 

ஒரத்தநாடு, செப்.9: ஒரத்தநாடு அருகே பழங்கொண்டார் குடிகாடு கிராமத்தில் விவசாயிகளுக்கான வயல் தினம் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பழங்கொண்டார்குடிக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற உழவர் வயல் தின விழா வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவரும் (அட்மா சேர்மன்) ஒரத்தநாடு மேற்கு திமுக கழக செயலாளருமான ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒரத்தநாடு வேளாண்மை உதவி இயக்குநர் கணேசன், ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் கலியமூர்த்தி அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சூரியா, கார்த்திக் மற்றும் ஏராளமான விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post தஞ்சாவூர் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு 2 பேர் கைது ஒரத்தநாடு அருகே விவசாயிகளுக்கு வயல் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: