தேங்கிய மழைநீரை அகற்றியபோது மேற்கூரையில் இருந்து விழுந்து வாலிபர் பலி

புழல், அக்.9: புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டான் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35). இவருக்கு, பிரியங்கா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பட்டதாரியான மாரிமுத்து, காவாங்கரையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். கடந்த, 5ம்தேதி மழை பெய்ததன் காரணமாக, கம்பெனியின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி, தண்ணீர் கம்பெனியில் கசிந்துகொண்டிருந்ததது. நிர்வாக அதிகாரியான மாரிமுத்து, கம்பெனியின் மேற்கூரை மீது ஏறி அதனை சரிசெய்வதற்காக நடந்து சென்றார்.

அப்போது, மேற்கூரை உடைந்து கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை, கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை மாரிமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மாரிமுத்துவின் மனைவி பிரியங்கா, விபத்திற்கு காரணம் கம்பெனிதான். எனவே, என் கணவரின் உயிரிழப்பிற்கு காரணமான கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post தேங்கிய மழைநீரை அகற்றியபோது மேற்கூரையில் இருந்து விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: