ராஜபாளையம் அக்.8: ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டி வருவதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலை முடங்கியார் சாலை ஆற்றுப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான கழிவுகளை கொட்டப்பட்டு வருகின்றன.
முடங்கியார் பகுதியில் இருந்து நீர்நிலைகளுக்கு பிரிந்து செல்லும் கால்வாய்கள் அனைத்தும் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டிக் கிடப்பதால் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே உடனடியாக ஆற்றுப்பகுதி மற்றும் கால்வாயில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The post ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.