ராமேஸ்வரத்தில் ரூ.99.68 லட்சத்தில் துறைமுகம் காவல்நிலைய கட்டிடம்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு

 

ராமேஸ்வரம்,அக்.8: ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காவல்துறை சார்பில் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல் துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் ரூ.99.68 லட்சம் மதிப்பிட்டில் துறைமுகம் காவல் நிலையம் புதிய கட்டிடத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். எஸ்பி சந்தீஷ், எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த துறைமுக காவல் நிலையக் கட்டிடத்தில் விசாரணை கைதி பாதுகாப்பு அறை, ஆவண பாதுகாப்பு அறை, கணினி அறை, ஆயுத பாதுகாப்பு அறை மற்றும் காவலர்கள் ஓய்வு அறை ஆகிய வசதிகளை உள்ளடக்கியவை ஆகும். இதில் சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி, மாநில தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ராமேஸ்வரத்தில் ரூ.99.68 லட்சத்தில் துறைமுகம் காவல்நிலைய கட்டிடம்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: