கால்நடையை சாலைகளில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

கீழக்கரை, அக்.8: கீழக்கரை பகுதிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனம் வந்து செல்கின்றன. சாலைகளில் பொது இடங்களில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. கால்நடை வளர்ப்பவர்கள் காலையில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை ரோட்டிற்கு விரட்டி விடுகின்றனர். அவை ஆங்காங்கே புற்களை மேய்ந்து விட்டு மாலையில் தானாகவே வீடு வந்து சேர்ந்து விடுகின்றன.

கால்நடைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், சில சமயம் சுற்றித்திரியும் கால்நடைகளால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழந்து உள்ளனர். தெருக்கள் சாலையிலும் கால்நடைகள் அதிகளவில் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. அவை சாலையில் தெருக்களிலும் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

The post கால்நடையை சாலைகளில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: