குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு

 

திருப்பரங்குன்றம், அக். 8: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பகுதியில் உள்ள குளத்தில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள நிலையூர் சூரக்குளம் சலையில் சிறிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் இப்பகுதி இளைஞர்கள் தூண்டில் வலை உள்ளிட்டவற்றால் மீன் பிடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று இந்த குளத்தின் ஒரு பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. வெயிலின் தாக்கத்தால் மீன்கள் செத்து மிதந்தனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியாமல் மீன் பிடிக்க வந்த இளைஞர்கள் திரும்பி சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post குளத்தில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: