வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு கிரேன் உதவியுடன் மீட்பு

 

வேடசந்தூர், அக். 8: வேடசந்தூர் அருகேயுள்ள சாலையூர் நால் ரோட்டில் வடிவேல் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவர் கேரளாவை சேர்ந்த கிளிப்டர்ஸ் (35). இவர் மேய்ச்சலுக்காக தனது எருமை மாட்டை தோட்டத்திற்குள் விட்டுள்ளார். மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடு கால் தவறி சுமார் 40 அடி ஆழமுள்ள தோட்ட கிணற்றுக்குள் விழுந்தது.

இதுகுறித்து கிளிப்டர்ஸ் உடனேவேடசந்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் உதவியுடன் எருமை மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளர் கிளிப்டர்ஸிடம் ஒப்படைத்தனர்.

The post வேடசந்தூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு கிரேன் உதவியுடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: