புதுகை கலெக்டர் வழங்கினார் ஆலங்குடி அருகே கதண்டு கடித்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்

 

புதுக்கோட்டை,அக்.8: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் வடக்குப்பட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வந்த விஷ வண்டுகளான கதண்டு திடீரென மாணவ மாணவிகளைக் கடிக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட அருகில் இருந்த மாணவ மாணவிகளைக் காப்பாற்ற முயற்சித்தபோது, அவர்களையும் கதண்டு தாக்கியது.

இந்த கதண்டு தாக்குதலில் வந்தனா(16), சமீதா(13), துர்க்கா (14), ஜெகதீஷ்வரன்(14), ஹரிகரன்(14) உள்ளிட்ட வடகாடு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களைக் காப்பாற்ற முயன்ற சங்கர்(40), ஜெயராஜ் (60) மற்றும் இளையராஜா (30) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் வடகாடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதண்டு கூடு கட்டி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து உடனடியாக கதண்டுகளை விரட்டி அடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post புதுகை கலெக்டர் வழங்கினார் ஆலங்குடி அருகே கதண்டு கடித்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: