கருங்கல், அக். 8: தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஆஸ்கர் பிரடி வெளியிட்டுள்ள அறிக்கை: மார்த்தாண்டம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டதில் இருந்து பல்வேறு பாதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பாலம் கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்நாள் வரையிலும் மக்கள் மத்தியில் அச்சமும், பல்வேறு கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் காங்கிரீட் பெயர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மேம்பால பணியில் பயன்படுத்தப்பட்ட காங்கிரீட் கலவை தரமற்றது என்பது தெரிய வருகிறது. அதுபோல மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுதை அவசர கதியில் சரி செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழக அரசு மக்களின் நலன் கருதி மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஐஐடி நிறுவனம் மற்றும் தனியார் கட்டுமான துறையில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் மூலம் ஆய்வு செய்து, பழுது ஏற்பட்ட பகுதியை சரிசெய்ய வேண்டும். அதன் பிறகுதான் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
The post மார்த்தாண்டம் மேம்பாலத்தின் உறுதிதன்மையை ஐஐடி நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் காங். மாநில பொதுச்செயலாளர் அறிக்கை appeared first on Dinakaran.