இதனையடுத்து படத்தை ஏன் கிழித்தீர்கள் என வேலு கேட்டுள்ளார். அதற்கு கிரண் (எ) கிஷோர்(21), வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த சவ ஊர்வலம் கொண்டு செல்லும் வாகன தொழில் செய்து வரும் மணிகண்டன்(27), ஸ்ரீராம்(22), தரணி(25) ஆகிய 4 பேர் வேலுவை தாக்கியுள்ளனர். இதனால் தலக்காஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்(28) மற்றும் அவருடன் 3 பேர் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் பேசியும், கல்லால் அடித்தும், நீ வண்டியை எடுத்துச் சென்றால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டி சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த வேலு மற்றும் மணிகண்டன் ஆகியோர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தலக்காஞ்சேரி கிராமத்தில் சவ ஊர்வலத்தில் நடைபெற்ற மோதல் குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தலக்காஞ்சேரியில் நடைபெற்ற சவ ஊர்வலத்தில் மோதல் இருவர் படுகாயம் appeared first on Dinakaran.