தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு குடந்தை மாணவர் தேர்வு

 

கும்பகோணம், அக்.5: குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய அளவில் பள்ளிகளுக்கான வில்வித்தை போட்டிக்கு கும்பகோணம் மாணவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் நவம்பர் மாதம் குஜராத்தில் 2024-25ம் கல்வியாண்டுக்கான இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நேரு பார்க்கில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தேசிய அளவிலான வில்வித்தை தெரிவு போட்டி நடைபெற்றது.

இதில் கும்பகோணம் சத்திரம் கருப்பூரை சேர்ந்த ராஜப்ரியா லெர்ன் ஆர்ச்சரியில் பயிற்சிபெறும் 9ம் வகுப்பு பயிலும் தீபேஷ் துளசிதரன் என்ற மாணவன் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2ம் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற உள்ள பள்ளிகளுக்கான வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கேற்கிறார். இவரை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் மற்றும் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு குடந்தை மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: