கந்தர்வகோட்டை பகுதியில் மழை

 

கந்தர்வகோட்டை,அக்.5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதி விவசாயிகள் தற்சமயம் அவர்களது நிலங்களில் கரும்பு, மரவள்ளிகிழங்கு, வாழை, நெல் போன்ற விவசாயம் செய்து உள்ளனர். போதிய மழை இல்லாமல் ஆழ்துளை கிணற்றில் மூலம் நீர் இரைந்து விவசாயம் செய்யும் நிலையில் போதிய நீர் வயல் முழுவதும் பாய்யாமல் இருந்து வந்தது.

இதனால் விவசாயி கவலையடைந்தனர். இந்நிலையில் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது மழையை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாகனங்கள் சற்றுநேரம் வரை முன்விளக்கு எரியவிட்டு சென்றனர். மேலும் பூமியின் வெப்பம் தணிந்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் மழை appeared first on Dinakaran.

Related Stories: