பல்கலைக்கழக நீச்சல் போட்டி லேடி டோக் கல்லூரி அணி சாம்பியன்

மதுரை, அக். 5: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைப்பிரிவின் அனுமதியின் பேரில், மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான நீச்சல்போட்டி ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களின் விபரம் வருமாறு: மேலூர் அரசுக்கல்லூரி மாணவி தனலட்சுமி, அட்சயா ஆகியோர், 50 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவு போட்டியில் 2, மற்றும் 3வது இடங்களை பெற்றனர்.

லேடி டோக் கல்லூரி மாணவி ஜெபிஷாரெபி முதலிடம் பெற்றார். பேக் ஸ்டோக் பிரிவில் ஸ்ரீநிதி, சுர்ஜிதா முதல் இரு இடங்களை பெற்றனர். ஆண்கள் ப்ரெஸ்ட்ஸ்டோக் 100 மீ., 50 மீ. பிரிவில் காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சந்தோஷ்ெ ஜபஸ்டீன் முதலிடம் பெற்றார்.  ப்ரீ ஸ்டைல் 100 மீ. பிரிவில் விருதுநகர் மாணவர் யுவன்ராஜா, 200 மீ. பேக்ஸ்டோக் 100 மீ., 50 மீ. பிரிவில் ரத்தின விஷ்ணு முதலிடம் பெற்றார்.

ப்ரீ ஸ்டைல் ரிலே பிரிவில், விருதுநகர் கல்லூரி மாணவர்கள் செல்வமுருகன், முகேஷ்குமார், மகாபிரபு, யுவன்ராஜ் அணி வெற்றி பெற்றது. போட்டிகளின் முடிவில், மதுரை லேடி டோக் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவிற்கு காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். நீச்சல் சங்க செயலாளர் கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் சாந்தமீனா, நெல்சன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பல்கலைக்கழக நீச்சல் போட்டி லேடி டோக் கல்லூரி அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: