குளத்தூரில் முப்பெரும்விழா

குளத்தூர்,அக்.5: குளத்தூர் அண்ணாநகர் காலனியில் உள்ள புத்தர் மாலைநேர மையத்தின் ஆண்டுவிழா, கராத்தே, சிலம்பம் அரங்கேற்ற விழா, குழந்தைகள் பாராளுமன்ற விழா என முப்பெரும்விழா நடந்தது. குறுக்குச்சாலை வட்டார முதன்மை குரு டோமினிக் அருள்வளன் தலைமை வகித்து பேசினார். குளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மாலதி செல்வப்பாண்டி, விளாத்திகுளம் ஒன்றிய 15வது வார்டு கவுன்சிலர் குருநாதன், ஆசிரியர் பால்ராஜ், பாலா, ராஜ், முனீஸ்வரன், சூர்யா, முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தர் மாலை நேர மைய நிறுவனர் பாக்கியராஜ் வரவேற்று பேசினார். மாணவர்கள முத்துக்குமார், அன்பரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் இயக்குனர் சகாயராஜ், குழந்தைகளும் அரசியல் கற்று சமூக விழிப்புணர்வு அடைய வேண்டும் என பேசினார். ஆசிரியை ஜெயா ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களின் கராத்தே, சிலம்பம் அரங்கேற்றம், குழந்தைகள் பாராளுமன்றம் நடந்தது. அதையடுத்து மாணவர்களின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இளையோர் சங்க பிரதிநிதி அருண்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை புத்தர் மாலைநேர மையத்தினர்கள் செய்திருந்தனர்.நடைபெறும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post குளத்தூரில் முப்பெரும்விழா appeared first on Dinakaran.

Related Stories: