கீழபுத்தனேரியில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

செய்துங்கநல்லூர், அக். 3: வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம், கீழப்புத்தனேரி துணை சுகாதார நிலையத்தில் நடந்தது. அறக்கட்டளை கள இயக்குநர் பாபு முன்னிலை வகித்தார். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மகாராஜன் வரவேற்றார். முகாமில் 30 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல்ரஹீம் ஹீரா நன்றி கூறினார். முகாமில் எக்ஸ்ரே நுட்புனர்கள் கிருஷ்டி, கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர்கள் நாகம்மாள், ஷாமிலா, சுகாதார தன்னார்வலர்கள் சோபனா தேவி, முத்துவேல், அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன், கிராம வளர்ச்சி அலுவலர் தமிழ்குமார், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post கீழபுத்தனேரியில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: