இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளில் தனிநபர் போட்டிகளில் முதலிடத்தை பெற்றவர்களும், குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அணியின் வீரர், வீராங்கனைகளும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் முதல் 4 இடத்தை வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.
மேலும் இதற்கான மாநில போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டகளில் வரும் 4ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட, மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3ம் பரிசாக தலா ரூ.1000 மற்றும் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட்டு வீரர் மட்டும் வீரங்களைகளை ஊக்குவித்து வருகிறார். வெற்றி பெற்ற அனைவரும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று நம் மாவட்டத்திற்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்; அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.