பைக்கை ஜானகிராமன் ஓட்டினார். இவர்கள் திருவள்ளூர் அடுத்த காக்களூர் சாலையில் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ஜானகிராமன் திடீரென்று பிரேக் பிடித்தார். அப்போது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் அர்ச்சகர் ராஜா தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். ஜானகிராமன் லேசான காயத்துடன் தப்பினார். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ராஜாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சகர் ராஜா பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்தில் அர்ச்சகர் பரிதாப பலி appeared first on Dinakaran.