கணவரின் ஜீப், கலவை இயந்திரங்கள் அபகரிப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி, திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

 

திண்டுக்கல், அக். 1: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கணவரின் ஜீப், கலவை இயந்திரங்களை மீட்டு தரக் கோரி, மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.வடமதுரை அருகே ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள். இவர் நேற்று தனது 14 வயது மகள், 11 வயது மகனுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றினார்.

நல்லம்மாள் கூறுகையில், ‘‘எனது கணவர் பொன்னுச்சாமி ஜீப் மற்றும் 2 கலவை மிஷின்களை கொண்டு கான்கிரீட் தொழில் செய்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அவரது ஜீப், கலவை இயந்திரங்களை கணவரின் உறவினர் மற்றும் வேலைக்கு வந்த பெண் சேர்ந்து அபகரித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த நான் தீக்குளிக்க முயன்றேன். எங்களுக்கு தற்போது வரை எந்த ஆதரவும் இல்லை. எனது கணவரின் ஜீப், கலவை இயந்திரங்கள் அனைத்தையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

The post கணவரின் ஜீப், கலவை இயந்திரங்கள் அபகரிப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி, திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: