நில பரிமாற்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியிடம் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை


பெங்களூரு மாநிலத்தில் மஜத-பாஜ கூட்டணி ஆட்சி இருந்தபோது, கங்கேனஹள்ளி லே அவுட்க்கு ஒதுக்கீடு செய்திருந்த நிலத்தில் 1.11 ஏக்கர் நிலத்தை பெங்களூரு வளர்ச்சி குழுமம் கையகப்படுத்தி இருந்தது. இந்த நிலத்தை தனியாருக்கு கொடுக்கும் டிநோடிபிகேஷன் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக லோக்ஆயுக்தாவில் புகார் கொடுக்கப்பட்டது. மஜத-பாஜ கூட்டணி ஆட்சியில் முறைகேடு நடந்ததால் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களாக இருந்த எச்.டி.குமாரசாமி மற்றும் பி.எஸ்.எடியூரப்பா உள்பட பலர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.

10 ஆண்டுக்கும் மேல் கிடப்பில் இருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, லோக்ஆயுக்தா அனுப்பிய சம்மனை ஏற்று கடந்த வாரம் பி.எஸ்.எடியூரப்பா விசாரணைக்கு ஆஜரானார். இதே புகாரில் நேற்று ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆஜராகி, அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

The post நில பரிமாற்ற வழக்கில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமியிடம் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: