சின்னமனூர் ஓட்டலில் 30 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

சின்னமனூர், செப். 27: சின்னமனூரில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 30 கிலோ அழுகிய கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் ஹோட்டல் மற்றும் கடைகளில் அழுகிய கோழி இறைச்சி விற்கப்படுவதாக மாவட்ட உணவு சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் சாலையிலுள்ள தியேட்டர் எதிரே உள்ள ஓட்டலில் நேற்று முன் தினம் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 30 கிலோ அழுகிய கோழி இறைச்சி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். இதுபோன்று சின்னமனூர் பகுதியிலுள்ள அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post சின்னமனூர் ஓட்டலில் 30 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: