அதன் பேரில் தனியார் பையோ சயின்ஸ் நிறுவனத்தின் பொது நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் மூலம் 10 மாற்றத்தினாளி பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சார தையல் இயந்திரங்களை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் த.பிரபு சங்கர் அவர்களுக்கு நேற்று மின்சார தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், பயிற்சி உதவி கலெக்டர் ஆயுஷ் குப்தா, ச.சீனிவாசன், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் கி.ரா.லேகா, சபரிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post 10 மாற்றத்தினாளி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்தில் மின்சார தையல் இயந்திரங்கள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.