திருத்துறைப்பூண்டி -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் விளிம்புக்கோடு அடிக்கும் பணி தீவிரம்

 

திருத்துறைப்பூண்டி செப் 20: திருத்துறைப்பூண்டி -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் விளிம்புக்கோடு அடிக்கும் பணி நடக்கிறது. திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் சிறியபாலங்கள், சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் மற்றும் மின்கபங்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் கருப்பு வெள்ளை வண்ணம் பூசும் பணி, சாலை நடுவில் மையக் கோடு, சாலை இரு புறமும் விளிம்புக் கோடு அடிக்கும் பணி நடக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி நேரடி மேற்பார்வையில் திருவாரூர் சாலை மற்றும் வேதாரண்யம் சாலை உள்ள சிறிய பாலங்கள், சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் மின்கம்பங்களுக்கு கருப்பு வெள்ளை பூசும் பணி உள்ளிட்ட சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை, இளநிலைப் பொறியாளர் ரவி பார்வையிட்டனர்.

The post திருத்துறைப்பூண்டி -திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் விளிம்புக்கோடு அடிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: