காரிமங்கலம், செப்.20: காரிமங்கலம் விஸ்வகர்மா சமூகம் சார்பில், விராட் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காரிமங்கலம் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோயில் வளாகத்தில் நடந்த விழாவில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காயத்ரிதேவி படம் மற்றும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
The post விஸ்வகர்மா ஜெயந்தி விழா appeared first on Dinakaran.