பாலக்காடு, செப். 19: கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல்சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் மேல்சாந்தியினர் பதவிக்கு 56 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 55 விண்ணப்பங்கள் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தன.
இதையடுத்து கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பி.சி.தினேஷன் நம்பூதிரிப்பாட் தலைமையில் தேவஸ்தான நிர்வாகிகள் முன்னிலையில் 55 பேர் பெயர்கள் வெள்ளிக்குடத்தில் போட்டு, குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இந்த குலுக்கல் முறை தேர்வில் புதுமனையை சேர்ந்த ஜித் நம்பூதிரி என்பவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அக்டோபர் 1-ம் தேதி முதல் 6 மாத காலம் தொடர்ந்து மேல் சாந்தியாக நீடிப்பார். 12 நாட்கள் கோயிலில் பஜனை முடித்து குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக ஜித் நம்பூதிரி பதவியேற்கவுள்ளார்.
The post குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு appeared first on Dinakaran.