இதற்கிடையே சிவக்குமாரின் தம்பி கண்ணன் (20), அடிக்கடி அண்ணனை பார்ப்பதற்காக அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது 15 வயது சிறுமி மீது ஆசை வந்துள்ளது. இதனால் சிறுமியிடம் நெருக்கமாக பழகி காதல் வலை வீசியுள்ளார். இதில் சிறுமி கண்ணனின் காதல் வலையில் விழுந்து விட்டார். இந்த விபரம் எதுவும் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. காதலனின் தம்பி என்பதால் அவருக்கு சந்தேகம் வரவில்லை. சம்பவத்தன்று மதியம் சுமார் 12 மணியளவில் சிறுமி திருவிதாங்கோட்டில் உள்ள தாத்தா வீட்டில் இருந்தார். அப்போது தாத்தாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதனை அவர் எடுத்து பேசியபோது, நான் கண்ணன் பேசுகிறேன். சிறுமியின் பெயரைக்கூறி அவளிடம் போனை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
தாத்தாவும், கண்ணன் தெரிந்த பையன் தானே என நினைத்து சிறுமியிடம் செல்போனை கொடுத்தார். செல்போனை வாங்கி பேசிய சிறுமியிடம், ஆசை வார்த்தைகளை அள்ளிவீசியதோடு, திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். சற்றும் யோசிக்காத சிறுமி, தாத்தாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அங்கு வந்த கண்ணன் சிறுமியை அழைத்துக்கொண்டு தப்பிவிட்டார். இதற்கிடையே பேத்தியை காணாமல் தாத்தா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கு அவர் தகவல் அளித்தார். அப்போது சிறுமியின் தாயார் தொடர்ந்து விசாரிக்கையில் கண்ணனையும் காணவில்லை. எனவே கண்ணன், தனது மகளை கடத்தி சென்றிருப்பதை உறுதி செய்த சிறுமியின் தாய், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் சிறுமியை கண்ணன் எங்கு அழைத்து சென்றார். இருவரும் தற்போது எங்கு இருக்கிறார்கள்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அண்ணனின் லிவிங் டுகெதர் காதலி மகளுடன் தம்பி ஓட்டம் appeared first on Dinakaran.